திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோர்ட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வேலை பார்க்கும் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கோர்ட் மூடப்பட்டது. மேலும் சுகாதார பணியாளர்கள் மூலம் கோர்ட் வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த கோர்ட்டில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.