Categories
உலக செய்திகள்

“பிணங்கள் குவியட்டும்”.. பிரதமர் கூறியதாக வெளியான கருத்து.. பிரிட்டனில் எழுந்துள்ள சர்ச்சை..!!

பிரிட்டனில் 3 ஆம் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவற்கு பதில் பிணங்கள் குவியட்டும் என்று பிரதமர் கூறியதாக வெளியான கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டில் மூன்றாவது ஊரடங்கு அமல்படுத்துவதை காட்டிலும் ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என்று கூறியதாக The Daily Mail செய்தியை வெளியிட்டுள்ளது. இது பிரிட்டன் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் அமைச்சர்கள், மற்றும் பிரதமர் அலுவலகம் மறுத்திருக்கிறது.

இந்நிலையில் வேஸ்லில் இருக்கும் Rhondda cynon Taf என்ற பகுதியில் வசிக்கும் Mountjoy என்ற பெண், பிரதமர் கூறியதாக வந்த கருத்துக்கள் என் இதயத்தை நொருக்கும் படி இருந்தது என்றும் அவை உண்மை என்று நிரூபணம் ஆனால் அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது இவர், தன் தாய் மற்றும் இரு சகோதரர்களை கொரோனாவிற்கு பலி கொடுத்துள்ளார். மேலும் என்னை போன்றவர்கள் வலி மற்றும் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அதனை பிரதமரும் அனுபவித்திருந்தால் அவர் இப்படி பேசியிருக்க மாட்டார். அப்படி அவர் கூறியிருந்தால் பிரதமர் பதவியில் இருக்க அவர் தகுதியானவர் அல்ல. மன்னிப்பு என்பது ஒரு ஆரம்பமாக இருக்கும். எனினும் உண்மையாக அவர் அப்படி கூறியிருந்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |