Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? பள்ளி மாணவியின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலசெரி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சங்கரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |