தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு, கசகசாவை மிக்ஸியில் அரைத்து, பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து, தேவையான சர்க்கரை கலந்து பருகலாம். இது உடலை குளிர்ச்சியாக்கும். மேலும் குழந்தைகளுக்கு பலம் தரும். சளி இருமல், ஒற்றைத் தலைவலி, ரத்த கொதிப்பு, நீரிழிவு, பித்தக் கிறுகிறுப்பு, சிறுநீரக பாதை நோய்கள் உள்ளிட்ட பல நோய்களைத் தீர்ப்பதற்கு மல்லிவிதை உதவும்.