Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அடிப்படை வசதிகள் சரியாகவே இல்ல…. போராட்டத்தில் ஈடுபட்ட கொரோனா நோயாளிகள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் கொரோனா நோயாளிகள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை பலவிதமான தனியார் கல்லூரியில் தங்கவைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கலவையிலிருக்கும் தனியார் கல்லூரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உணவு தினமும் அங்கேயே அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுமார் 100க்கும் அதிகமான நோயாளிகள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் அவர் கூறியதாவது, உணவு வசதி சரியானதாக இல்லை. அவ்வாறு கொடுக்கப்படும் உணவுகளில் புகை நாற்றம் வீசுகிறது. மேலும் கழிப்பறை தினமும் சுத்தம் செய்யப்படுவதில்லை என்று புகார் கூறினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த ஆற்காட்டினுடைய தாசில்தார் உட்பட சில அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Categories

Tech |