தனிக்குடித்தனம் போக கணவர் சம்மதிக்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாகலிங்கபுரம் நகரில் சரத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் ஜெயபாரதி தனிக்குடித்தனம் போக வேண்டும் என சரத்குமாரை கட்டாயப்படுத்தி உள்ளார்.
ஆனால் அதற்கு சரத்குமார் சம்மதம் தெரிவிக்காததால் ஜெயபாரதி சோகமாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.