தேனியில் ஒரே நாளன்று 162 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று வங்கி ஊழியர் மற்றும் அரசுப் பள்ளியின் ஆசிரியர் உட்பட 162 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 19,160 உயர்ந்துள்ளது. மேலும் 132 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17,775 உயர்ந்துள்ளது. இதனிடையே கூலித்தொழிலாளி உட்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.