காணாமல் போன மூதாட்டி கண்மாயில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சார்ஜர் வண்ணார்பேட்டை பகுதியில் சின்னம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி காணாமல் போனதால் அவரது மகன் பாலன் என்பவர் அனைத்து இடங்களிலும் அவரை தேடி பார்த்துள்ளார். இந்நிலையில் சத்திரப்பட்டி கண்மாய்க்குள் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி பாலன் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்மாய்க்குள் இறந்து கிடப்பது தனது தாய் சின்னம்மாள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது தாயின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பாலன் சாத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.