சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட்.
தேவையான பொருட்கள் :
சேப்பங்கிழங்கு – 1/4 கிலோ
புளிக்கரைசல் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சேப்பக்கிழங்கை அவித்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . பின்னர் காய்ந்த மிளகாய் , பெருங்காயத்தூள், புளிக்கரைசல் மூன்றையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, கொள்ளவேண்டும். சேப்பங்கிழங்கு துண்டுகளின் மீது தேவையான உப்பு மற்றும் அரைத்த கலவையை தடவி ஊற விட வேண்டும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை மற்றும் சேப்பங்கிழங்கு துண்டுகள் சேர்த்துக் கிளறி , ரோஸ்ட் செய்து இறக்கினால் சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார் !!!