Categories
தேசிய செய்திகள்

அதிகபட்சம் 50 பேருக்கு மட்டுமே அனுமதி…. முதல்வர் திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.

அதனால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றால் கட்டாயம் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மே 1 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் குறைவான பாதிப்பு அதிகரித்து வருவதால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கேரளாவில் திருமணம் மற்றும் இறுதி சடங்கில் பங்கேற்க வோரின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 20 ஆகவும் அதிகபட்சம் 50 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் வரம்பை மீறக் கூடாது. வழிபாட்டு தளங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை. அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கூறியுள்ளார்.

Categories

Tech |