தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் வாங்குபவர்கள் பல்வேறு மாடல்களை வாங்குகிறார்கள். அதிலும் குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் அதிக அளவு விற்பனைக்கு வருகின்றன.
அதில் பலரும் எக்சேஞ்ச் முறையில் புதிய போன்களை வாங்குகின்றனர். அவர்களால் தங்களது பழைய மொபைலின் தற்போதைய சந்தை விலையை தெளிவாக அறிய முடியவில்லை. ஆன்லைன் தளங்களில் அதிகபட்ச விலை மட்டுமே உள்ளது. பலரும் தங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய மொபைல் வாங்க தான் விரும்புகிறார்கள். ஆனால் உங்கள் மொபைலில் உள்ள ஹார்ட்வேர் அதிக விலைக்குப் போகும். ஆனால் மொபைல் பற்றி அறியாத சிலர் தங்கள் மொபைல் எவ்வளவு விலக்கி போகிறதோ அவ்வளவு விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.
அதனால் உங்களுக்கு இழப்புதான் நேரிடும். உங்கள் மொபைலில் உள்ள ஹார்ட்வேர் எவ்வளவு விலகிப் போகிறது என்பதை நீங்களே தெரிந்துக்கொள்ளலாம். அதற்கு Cashify யில் ஏறக்குறைய 90 சதவீதம் சரியான விலையை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அதனால் அதிர்ச்சி என்று நீங்கள் உங்கள் மொபைலை டைப் செய்து உங்கள் மொபைல் எவ்வளவு விலைக்கு போகும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். அதனால் இனிமேல் உங்கள் பழைய போனை கொடுத்து ஏமாறாமல் சரியான விலைக்கு விற்று பயனடையுங்கள்.