Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டவை… அதிகரித்து வரும் பாதிப்புகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 80 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக சிங்கம்புணரி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் வீட்டு தன்மைகளில் 565 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8264 ஆக அதிகரித்துள்ளது. அதில் 28 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |