Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உயிரிழப்பை தவிர்ப்பதற்கான தீவிர முயற்சி..! 4 ஆயிரம் லிட்டர் இருப்பு உள்ளது… அதிகாரிகள் தகவல்..!!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் 4 ஆயிரம் லிட்டர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்.வி.எம் மகளிர் கலைக்கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 360 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்களும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆக்ஸிஜன் தேவை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் வட மாநிலங்களில் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற நிலையை தவிர்ப்பதற்காக அரசு தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் விஜயகுமார் கூறும்போது, 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் மருத்துவமனையில் இருப்பு வைத்துக் கொள்ளும் அளவுக்கு கொள்கலன் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 300 லிட்டர் ஆக்சிஜன் நவீன சிகிச்சை பிரிவில் இருப்பு வைத்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாதத்திற்கு 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தேவைப்பட்டது. ஆனால் வாரம் ஒரு முறை 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். அதனை நாங்கள் திருச்சியில் இருந்து இறக்குமதி செய்து வருவதால் தற்போது தடையில்லாமல் ஆக்ஸிஜனும் கிடைத்து வருகிறது என்றார். மேலும் 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டது. அதில் நோயாளிகளுக்கு பயன்படுத்தியது போக கையிருப்பில் 4 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் தற்போது உள்ளது என்று என்றார்.

Categories

Tech |