Categories
கிரிக்கெட் விளையாட்டு

DC VS RCB: ரிஷப் பண்ட், ஹெட்மயர் போராட்டம் வீணாணது.. … ஒரு ரன் வித்தியாசத்தில்….. ஆர்சிபி திரில் வெற்றி…!!!

ரிஷப் பண்ட்,ஹெட்மயர் அரை சதம் எடுத்துடும் , 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது .

நேற்று அகமதாபாத்தில்நடைபெற்ற  , 22 வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெல்லி கேப்பிடல்ஸ்  அணிகள்  மோதின .  இதில்  டாஸ் வென்ற டெல்லி  அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால்,ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தொடக்க வீரர்களாக விராட் கோலி- தேவ்தத் படிக்கல் களமிறங்கினர் . இதில் விராட் கோலி 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ,அடுத்து படிக்கல் 17 ரன்களில் வெளியேறினார் .மேஸ்க்வெல்  25 ரன்கள் , படித்தார் 31 ரன்கள் மற்றும் வாஷிங்டன் சுந்தர்  6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் .அடுத்து களமிறங்கிய ஏபி டி வில்லியர்ஸ், அட்டமிழக்காமல்  5 சிக்சர் , 3 பவுண்டரிகளை அடித்து  75 ரன்களை குவித்தார்.

இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 5  விக்கெட் இழந்து 171 ரன்களை  குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 172 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது .தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா -ஷிகர் தவான் களமிறங்கினர். பிரித்வி ஷா 21 ரன்கள் மற்றும் தவான் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்கள் , ஸ்டோய்னிஸ்  22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் இழக்க , மறுபுறம் ரிஷப் பண்ட்- ஹெட்மயர் இருவரின் பார்ட்னர்ஷிப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ஹெட்மயர் 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். ஹெட்மையர் 53 ரன்களும் ,ரிஷப் பண்ட் 58 ரன்களும் குவிக்க, இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால்   1 ரன் வித்தியாசத்தில், ஆர்சிபி அணி திரில் வெற்றி பெற்றது.

Categories

Tech |