மும்பை தானே பகுதியில் உள்ள பிரைம் கிரிடிக் கேர் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதால் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது 4 நோயாளிகள் உயிரிழந்ததாக முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. தொடர்ந்து மருத்துவமனையில் ஏற்படும் தீ விபத்தால் தற்போது வரை 20 க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரசு விரைந்து ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.