பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 540 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 2,412 பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 24 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 32 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் நேற்று புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கோவை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 104 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 31 ஆயிரத்து 998 பேருக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.