Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மயானத்தில் வைக்கப்பட்ட மனைவி… கணவருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாததால் ரஜெஸ்வரி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து ராஜேஸ்வரியின் உடலை மயானத்தில் தகனம் செய்வதற்காக ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மூர்த்தி வயது முதிர்வு காரணமாக இறுதி சடங்குகளை நடத்தி விட்டு மயானத்திற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி திடீரென மாரடைப்பால் இறந்து விட்டதால் உடனடியாக மயானத்தில் இருப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூர்த்திக்கு ஆக வேண்டிய இறுதி சடங்குகளை நடத்தி விட்டு கணவன் மனைவி இருவரையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தகனம் செய்துள்ளனர்.

Categories

Tech |