Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஜாலியா இருந்த போது… மாணவனுக்கு நடந்த விபரீதம்… சென்னையில் நடந்த சோகம்..!!

கோவில் குளத்தில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது நண்பர்களுடன் இணைந்து திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குளித்துக்கொண்டிருந்த விக்னேஷ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தண்ணீரில் மூழ்கி பலியான விக்னேஷின் உடலை மீட்டனர். அதன் பின்  சங்கர் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |