நடிகை அஞ்சலி அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென மிகபெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருப்பவர் நடிகை அஞ்சலி. படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் கொரோனா குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து கட்டாயமாக முக கவசம் அணியுங்கள். வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.நானும் படப்பிடிப்பிற்காக வெளியில் செல்கிறேன்.
ஆனால் முழு முன்னெச்சரிக்கையுடன் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறேன். மேலும் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சாப்பிடுங்கள். உடற்பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். கொரோனாவின் தாக்கத்தால் எல்லாத்துறைகளிலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.மேலும் பல நெருங்கியவர்களை நாம் இழந்து வருகிறோம். இதனை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு எச்சரிக்கையுடன் இருங்கள் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.