Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அம்மா என்னை திட்டுறாங்க… நம்பி சென்ற பள்ளி மாணவி… கைது செய்த காவல்துறையினர்…!!

17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி நகர் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் அவரது உறவினரான சங்கர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியதை அறிந்த அந்த மாணவியின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து தனது தாய் கண்டித்ததை சங்கரிடம் மாணவி கூறியபோது அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து அதனை நம்பி வெளியே வந்த மாணவியை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு கடத்தி சென்றிருக்கிறார். இந்நிலையில் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தனது மகளைக் சங்கர் கடத்தி சென்று விட்டதாக மாணவியின் தாய் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவியை மீட்டு அவரை கடத்தி சென்ற சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |