புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவம் தவறி மழை பெய்ததால் முந்திரி விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை, விராலிப்பட்டி, கோமாபுரம், வீரடிபட்டி மற்றும் புது நகர் ஆகிய கிராம பகுதிகளில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டு வருடம் தோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பலத்த மழை பெய்துள்ளது.
இதனால் முந்திரி பூக்கள் உதிர்ந்தது மட்டுமின்றி அனைத்தும் கருகி முந்திரி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.