புதுக்கோட்டை மாவட்டத்தில் சமயபுரத்தாள் முத்து மாரியம்மன் கோவிலில் விளக்குப் பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோவிலூர் பகுதியில் சமயபுரத்தாள் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் குத்துவிளக்குப் பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பூஜை ஆரம்பம் செய்வதற்கு முன்பு அம்மனுக்கு தயிர், பால், மஞ்சள், பன்னீர், இளநீர், திரவியம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த குத்துவிளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கில் பெண்கள் பங்கேற்று தெய்விக ராகங்கள் பாடி சாமி தரிசனம் செய்துள்ளனர்.