நான்காயிரம் பேர் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சியில் முகக் கவசம் அணிய தேவையில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் வருகின்ற மே 11ம் தேதி மிகவும் பிரபலமான ‘பிரிட்’ இசை விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி லண்டனில் உள்ள ‘ஓ2’ என்ற அரியானாவில் நடைபெற உள்ளது. இதில் 4000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அப்படி கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரங்கத்திற்கு நுழையும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்த பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.