இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இரட்டை முக கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத் துருவ் சக்கரவர்த்தி அறிவுரை வழங்கியுள்ளார். துணியாலான முகக்கவசம் மற்றும் அறுவை சிகிச்சை நேரங்களில் பயன்படுத்தப்படும் முகக்கவசம் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டும். இரட்டை முக கவசம் அணிந்தவர்களில் 85 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.