Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எனக்கு வேற வழி தெரியல….. மன உளைச்சலில் கணவன் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப பிரச்சனையில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வேகுபட்டி ஏனமேடு கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மங்கலம் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனை அடைந்த ரமேஷ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் இருந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ரமேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ரமேஷ் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |