நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை மட்டுமே ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகி ஆக்சிஜன் அனைத்தையும் தமிழ்நாட்டுக்கே வழங்கவும் உத்தரவிட்டது. ஜூலை 31 பிறகு அப்போதைய சூழலை பொறுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்வது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.