Categories
மாநில செய்திகள்

ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில்  ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. ஆனால் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா வேகம் எடுத்து வருகிறது. எனவே பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் எழும்பூரில் இருந்து மாலை 6.55 மணிக்கு நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மறுமார்க்கமாக நாகர்கோவிலிலிருந்து மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் ஏப்ரல் 20, மே 7, 14, 21,28, ஜூன் 4,11 ஆகிய தேதிகளில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |