புதுக்கோட்டை மாவட்டத்தில் மெய்க்கண்ணுடையால் அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மெய்கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். அந்த விழாவில் 500 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும். அனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு சம்பிராயத்துக்காக மட்டுமே நடைபெற்றுள்ளது.
அதில் கோவில் காளைகள் மட்டும் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் கோவில் காளைகள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவில் அருகேயுள்ள திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் வாடிவாசலில் அந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. ஆனால் அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை. அந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.