சீனாவில் எண்ணெய் கப்பல் மீது பெரிய சரக்கு கப்பல் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
சீனாவில் ஏப்ரல் 27-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு எண்ணெய் கப்பல் மீது பெரிய கப்பல் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தோங் கடல்சார் நிர்வாகம் கூறியுள்ளது. அதாவது பெரிய சரக்கு கப்பலான ஸீ ஜஸ்டிஸ், க்கிங்டஒ கடலில் கப்பல் நிறுத்துமிடத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த சிம்பொனி எண்ணெய் டேங்கர் கப்பல் மீது வேகமாக மோதியது. அதில் எண்ணெய் கப்பல் மோசமாக சேதமடைந்த நிலையில் கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
இந்த விபத்தின்போது ஒரு மில்லியன் என்னை பீப்பாய்கள் சிம்பொனி கப்பலில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் கடலில் குறிப்பிட்ட அளவு கலந்துள்ளது. மேலும் அந்த விபத்தின் போது எண்ணெய் கப்பலில் இருந்த குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.