Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் 2021: வெற்றி கணக்கை தொடருமா சிஎஸ்கே …? சென்னை-ஹைதராபாத் இன்று மோதல் …!!!

இன்றைய 23வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இன்று நடைபெறும் 23-வது லீக் போட்டியானது , டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே அணி ,1 தோல்வியை சந்தித்து ,  4 போட்டிகளில் வென்று தரவரிசை பட்டியலில் ,2 வது இடத்தைப் பெற்றுள்ளது.

இதுபோல 5 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி ,ஒரு போட்டியில் வெற்றி பெற்று மற்ற 4 போட்டிகளில் தோல்வியை  சந்தித்து ,தரவரிசை பட்டியலில் 8வது இடத்தை பெற்றுள்ளது. இதனால்  இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி கணக்கை தொடருமா  அல்லது ஹைதராபாத் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா , என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Categories

Tech |