Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! மனதை உலுக்கும் மரணம் – பெரும் சோகம்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் கில்லோய் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது பெண் உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை பைக்கில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாகக் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ்க்கு எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் கொரோனா காரணமாக யாரும் வரவில்லை. எனவே அந்த பெண்ணின் மகனும் நண்பனும் சடலத்தை பைக்கிலேயே சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |