Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ‘தொட்டி ஜெயா’ படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் இவரா?… வெளியான தகவல்…!!!

சிம்புவின் தொட்டி ஜெயா படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான தொட்டி ஜெயா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் துரை இயக்கியிருந்த இந்த படத்தில் கோபிகா கதாநாயகியாக நடித்திருந்தார் . சிம்புவின் சினிமா பயணத்தில் இந்த படம் ஒரு முக்கியமான படமாக அமைந்தது . இந்நிலையில் இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Harris Jayaraj - Yaaridamum - Thotti Jaya by milanshyam on Smule

அதாவது தொட்டி ஜெயா படத்தில் முதலில் நடிகை நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்திருக்கிறார்கள் . ஆனால் இதற்கு முன்பே இயக்குனர் துரை நடிகை கோபிகாவை தேர்வு செய்ததால் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க முடியாமல் போனதாம். அப்படி இந்த படத்தில் நயன்தாரா நடித்திருந்தால் இந்த படம்  அவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |