Categories
உலக செய்திகள்

53 மாலுமிகளுடன் மாயமான நீர்மூழ்கி கப்பல்…. கப்பல் மூழ்கும் முன் பதிவு செய்யப்பட்ட நிகழ்வு….. கண் கலங்க வைத்த வீடியோ காட்சி….!!

இந்தோனேசியா நீர்மூழ்கிகப்பல் மாலுமிகள் கப்பல் மூழ்கும் பதிவு செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி பாலி கடற்பகுதியில் இந்தோனேசியா கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மாயமானது . இதனிடையே இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர் கப்பலின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்தோனேஷியா கடற்படை குழுவினர் கடந்த 24 ஆம் தேதி வரை  பயணிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் இருக்கும் என தெரிவித்தனர்.

ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை 53 ஊழியர்களும் மரணமடைந்து விட்டனர் என்றும் கப்பல் மீட்க முடியாத 850 மீட்டர் ஆழத்திற்கு சென்று விட்டது என்ற அதிர்ச்சி தகவலை வெளியானது. இந்நிலையில் கண்கலங்க வைக்கும் வீடியோ காட்சி ஒன்றை படை வீரர் ஒருவர் கப்பல் மூழ்கும் முன்னர் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு படைவீரர் பாடல் ஒன்றை வாசிக்க மற்ற படைவீரர்கள் பாடல் பாடும் படை வீரரை சூழ்ந்துகொண்டு சுற்றி பாடல் பாடி நடனமாடி கொண்டிருக்கின்றனர்.

இந்த வீடியோ பதிவு செய்து சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த கப்பலானது ஆழத்தில் மூழ்கி மூழ்கியுள்ளது. இந்நிலையில் விபத்து குறித்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை ஆனால் திடீரென கப்பலில் ஏற்பட்ட பழுதினால் மிதக்க முடியாமல் போயிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |