பிரதமர் மோடியின் அத்தை கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. டெல்லியில் நாளொன்றுக்கு 350 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவினால் பலியாகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியின் அத்தையான நர்மதாபென் மோடிக்கு 80 வயது ஆகின்றது. இவர் கணவரை இழந்து தனது குடும்பத்துடன் குஜராத் மாநிலத்தில் உள்ள அலகாபாத் பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலகாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நர்மதாபென் மோடி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து நர்மதாபென் மோடி மறைவுக்கு பலரும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்