பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி, இந்தியாவிற்கு தடுப்பூசி வழங்குவதற்காக நாட்டு தலைவர்களை வலியுறுத்தவுள்ளனர்.
பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரின் மனைவி இருவரும் Global Canada citizen அமைப்பு மற்றும் Selena Gomez என்ற பிரபலம் சேர்ந்து நடத்தும் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இருவரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிலிருந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரை அனைத்து தலைவர்களிடமும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு ஊசிகளை பிற நாடுகளுடன், குறிப்பாக இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்தவுள்ளார்கள்.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குறைபாட்டால் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் சுமார் 60 மில்லியன் டோஸை இந்தியாவிற்கு அளிக்குமாறு அந்நாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அனுமதிக்காக அமெரிக்கா காத்திருக்கிறது. அனுமதிக்கிடைத்தவுடன் சுமார் 60 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப இருக்கிறது. அதேசமயத்தில் பிரிட்டன் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தங்களிடம் தடுப்பூசி மீதம் இல்லை என்றும் தற்போது பிரிட்டனில் தடுப்பு செலுத்தும் திட்டத்தின் மீது தான் எங்கள் கவனம் உள்ளது என்றும் கூறிவிட்டார்.