Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே நன்றாக வளர்ந்துவிட்டார்களே… ‘காக்கா முட்டை’ பட சிறுவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

காக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காக்கா முட்டை . தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

Kaaka Muttai boys video after long time காக்கா முட்டை பாய்ஸ் வீடியோ வைரல்

இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு இரண்டு தேசிய விருதுகளை பெற்றது. மேலும் இந்த படம் ஆஃப் டிக்கெட் என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் காக்கா முட்டை படத்தில் நடித்த விக்னேஷ், ரமேஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர். இந்நிலையில் இவர்களது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |