Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய டிராக்டர்… ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நிலைதடுமாறி சாலையில் டிராக்டர் கவிழ்ந்ததால் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெளத்தூர் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் மாலூர்-பாகலூர் சாலையில் டிராக்டரை ஓட்டிச் சென்றபோது, திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து நிலைதடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடிய டிராக்டர் திடீரென கவிழ்ந்து விட்டது. இதில் படுகாயமடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |