புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆத்தங்கரை பட்டியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு கடன் கொடுத்துள்ளார். இதன் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அய்யாவு கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு செல்வராஜிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் சத்யராஜ் இருவரும் சேர்ந்து அய்யாவுவை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யாவுவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அரிவாளால் வெட்டிய செல்வராஜ் மற்றும் அவரது மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.