பணத்திற்காக தனது காதலியை வெறும் உள்ளாடையுடன் நிறுத்தி நேரலையில் கொடுமை செய்த யூடியூப் பிரபலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷ்ய நாட்டில் stanislav reshetnikov என்ற யூடியூப் பிரபலம் வசித்து வருகிறார். இவருடைய காதலி valentina. இவருக்கு 28 வயது ஆகும். இவர் தற்போது 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். Stanislav Reshetnikov தனது காதலியான valentina பணத்திற்காக அரைகுறை ஆடைகளை அணிய வைத்து கொடுமைப்படுத்தி பார்ப்பார். அதன்படி அவருக்கு ஒருவர் ஆயிரம் டாலர்கள் தருவதாகவும் அதற்காக valentinaவை கொடுமை படுத்தி பார்க்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் Stanislav Reshetnikov valentinaவை உறையவைக்கும் குளிரில் வெரும் உள்ளாடையுடன் கொட்டும் பனியில் நிற்க வைத்துள்ளார். அதன்பின் valentina சிறிது நேரத்திலேயே தரையில் மயங்கி விழுந்து உயிரை விட்டுள்ளார். அவர் உயிர் பிரிந்த பிறகும் Stanislav Reshetnikov நேரலையில் ஒளிபரப்புவதை நிறுத்தவில்லை. முதலில் valentina ஹைபோதேர்மிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஆனால் உடற்கூறு ஆய்வில்தான் அவர் தலையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து Stanislav Reshetnikovவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் valentinaவை தான் பல முறை தலையில் பலமாக அடித்ததாக Stanislav Reshetnikov ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து Stanislav Reshetnikov கைது செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது