புதுக்கோட்டை மாவட்டத்தில் குடி போதையில் தகராறு செய்தவரை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் கட்டை விரலை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மருதங்குடி பகுதியில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதங்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு குடி போதையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்த மேகநாதன் அவரை தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பசுபதி மேகநாதன் கட்டை விரலை கடித்து துப்பியுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் மேகநாதனை மீட்டு கட்டை விரலை எடுத்து வாட்டர் கேனில் போட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனால் பசுபதியை கைது செய்த காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.