இந்தியாவின் தற்போதைய நிலைமையை விளக்கும் வகையில் ஒரு புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியாவை கொரோனாவின் இரண்டாம் அலை புரட்டிப் போட்டுவருகிறது. அதாவது கொரோனா பரவிய காலகட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது வெளிமாநிலங்களிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வந்தனர். அதன் பின்பு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் வெளிமாநிலங்களுக்கு திரும்பினர்.
தற்போது கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருவதால் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர், அதனை உணர்த்தும் வகையில் ஒரு புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவிவருகிறது.
அந்த புகைப்படத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில் புலம்பெயர்ந்த ஒரு பெண் பெட்டியில் தன் மகனை படுக்க வைத்து இழுத்துச்சென்று கொண்டிருக்கிறார். ஆனால் தற்போது ஒரு பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து சிறுவன் ஒருவன் இழுத்துச்சென்று கொண்டிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் அனைவரையும் கண்கலங்க செய்கிறது இந்த புகைப்படம்.