தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை குறித்து ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்த உள்ளார். மே 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 100 ஊரடங்கு அமல் படுத்த உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், ஆலோசனை நடைபெற உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.