நேற்றைய போட்டியில் அமித் மிஸ்ரா விதியை மீறி ,பந்தை எச்சியால் தடவியதற்க்காக அவருக்கு அம்பயர் எச்சரிக்கை விடுத்தார் .
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் ,பெங்களூர் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அப்போது 6வது ஓவரில் டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பந்துவீசினார். அவர் பவுலிங் செய்வதற்கு முன், பந்தை எச்சியால் தடவி உள்ளார்.
இதனைப் பார்த்த அம்பயர் ,அணியின் கேப்டனான ரிஷப் பண்டிற்கு முதலில் எச்சரிக்கை விடுத்தார். கிரிக்கெட் விளையாட்டின் போது பவுலர்கள் பந்து வீசுவதற்கு செய்வதற்கு முன், பந்தை எச்சியால் தடவி வீசுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ,கடந்த சீசனில் இருந்து ஐசிசி , இதற்கு தடை விதித்துள்ளது. இதனால் விதியை மீறி செயல்படும் வீரர்கள் முதலில் எச்சரிக்கப்படுவர், இதே தவறை மீண்டும் செய்தால் அந்த அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும்.