Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படம்… சூப்பர் அப்டேட் சொன்ன இசையமைப்பாளர்…!!!

நடிகர் சூர்யா தயாரிப்பில் பிக்பாஸ் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு  பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன். இவர் இதற்கு முன் ஜோக்கர், ஆண்தேவதை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியனுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது . அந்த வகையில் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார் .

புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கும் இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின்  புதிய அப்டேட்டை கிரிஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தின் பாடல்களுக்கான இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது . விரைவில் பாடல்கள் வெளியாகலாம். மேலும் பின்னணி இசைக்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளது’ என பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |