மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முரளிதர்ராவ், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார்.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிண்டி ராஜ்பவனில் தங்கிய அமித்ஷா வை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்தித்தார். இதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முரளிதர்ராவ், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர்.