Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இதை செலுத்திக் கொள்ளுங்கள்… எந்த உடல்நலக்குறைவும் வராது… மாவட்ட அதிகாரியின் அசத்தலான விழிப்புணர்வு…!!

வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரையிலும் 92 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில்  நாளொன்றுக்கு 60% நபர்கள் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். எனவே மாநகராட்சி தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனையடுத்து வேலூர் மாநகராட்சியில் வசிக்கக்கூடிய 45 வயதிற்கு மேல் இருப்பவர் அனைவருக்கும் 30 ம் தேதி தடுப்பூசி செலுத்துவதற்கான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் உடல் நலக்குறைவு பாதிக்குமோ என்ற பயத்தில் இருக்கின்றனர். ஆனால் தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெருக்களில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். இவ்வாறு வேலூர் மாநகராட்சியில் இதுவரையிலும் 92 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 66 ஆயிரம் நபர்கள் 45 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |