நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.
இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் ஜன் கன்டெய்னர்கள்,ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிவரும் சரக்கு கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் அறிவித்துள்ளது. அதனைப்போலவே கொரோனா தடுப்பு சார்ந்த பணிகளுக்கான கருவிகள் உள்ளிட்டவற்றை துறைமுகத்தில் வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவற்றுக்கு வாடகை வசூலிக்க கூடாது என கூறியுள்ளது.