நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் , பத்திரமாக நாடு திரும்புவதற்கு ,அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என்று பிசிசிஐ உறுதி அளித்துள்ளது .
இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல , அவர்களுடைய சொந்த ஏற்பாட்டின் மூலம் , நாடு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்களான கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா , ஆண்ட்ரூ டை ஆகியோர் சொந்த நாட்டிற்கு திரும்ப உள்ளனர். இவர்களைத் தவிர மற்ற 14 ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்திற்கு மே 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.
எனவே ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் ஆஸ்திரேலிய வீரர்கள், தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது பற்றி பிசிசிஐ – யின் தற்காலிக தலைமை செயல் அதிகாரியான ஹேமங் அமின், ஐபிஎல் நிர்வாகத்திற்கு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமெடுத்து கொண்டிருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள சில வீரர்கள் தாயகம் திரும்ப முடிவு செய்திருப்பதை ,நாங்கள் மதிக்கிறோம். கொரோனா தொற்று பரவும் நிலையில் ,அனைத்து வீரர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் பத்திரமாக இருக்கின்றன. மேலும் அவர்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை ,கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. எனவே ஐபிஎல் தொடர் முடிந்ததும், வெளிநாட்டு வீரர்கள் தாயகம் திரும்புவதற்கான அனைத்தும் ஏற்பாட்டையும் , பிசிசிஐ செய்து கொடுக்கும். எனவே வீரர்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை, என்று பிசிசிஐ உறுதி அளித்துள்ளது .