Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு விற்பனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

நெல்லையில் கஞ்சாவை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டரான சண்முக மூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை காவல்துறையினர் சோதனை செய்ததில், அவர் கஞ்சாவை கடத்தி சென்றது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அவரை விசாரணை செய்ததில் அவர் திம்மராஜபுரத்தில் வசித்துவந்த சங்கர் என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இவர் அவர் வைத்திருந்த 6 கிலோ அளவுடைய கஞ்சாவை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடம் விற்பனை செய்வார் என்பதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து வழக்குப்பதிவு மேற்கொண்டனர்.

Categories

Tech |