நெல்லையில் டீக்கடையை அடித்து நொறுக்கிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் டீக்கடையை நிறுவி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மாயாண்டி மற்றும் இசக்கிமுத்து தங்களுடைய கூட்டாளியுடன் முருகேசனுடைய டீக்கடைக்கு அருகே நின்றனர். அப்போது முருகேசனுடைய நாய் அவர்களைப் பார்த்து குறைத்ததால் டீ கடைகாரருக்கும் அவர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த இருவரும் முருகேசனுடைய கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனை தடுக்க வந்த அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.